இராணுவ கண்காணிப்பு விமானங்களை ஈடுபடுத்த பிரித்தானியா அறிவுறுத்தல்!

ஹமாஸ் அமைப்பினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளை கண்டறிவதற்காக காசா பகுதியில் தமது இராணுவம் கண்காணிப்பு விமானங்களை ஈடுபடுத்தவுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இராணுவ கண்காணிப்பு விமானங்களை ஈடுபடுத்த பிரித்தானியா அறிவுறுத்தல்!

ஹமாஸ் அமைப்பினரால் கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி முதல் சிறைப்பிடிக்கப்பட்ட சுமார் 240 பணயக்கைதிகளில் சுமார் 110 பேர் அண்மைய போர் நிறுத்த காலப்பகுதியில் விடுவிக்கப்பட்டனர்.

ஹமாஸ் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பாலஸ்தீனப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

காசாவில் இன்னும் 130க்கும் மேற்பட்ட பணயக்கைதிகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், பணயக்கைதிகளை மீட்கும் நடவடிக்கைக்கு ஆதரவாக, கிழக்கு மத்திய தரைக்கடல் மீது தமது கண்காணிப்பு விமானங்களை ஈடுபடுத்தவுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், குறித்த விமான கண்காணிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் காலம் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

எனினும், விமானத்தில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் நிராயுதபாணிகளாக இருப்பார்கள் எனவும் பணயக்கைதிகளை மீட்கும் முயற்சிகளில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள் எனவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.