பில் கேட்ஸ்ஸை சந்தித்த ஜனாதிபதி ரணில்!
உலக பணக்காரர்களில் ஒருவரும், மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் நிறுவுனருமான பில் கேட்ஸுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.

உலக பணக்காரர்களில் ஒருவரும், மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் நிறுவுனருமான பில் கேட்ஸுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.
டுபாயில் உள்ள எக்ஸ்போ சிட்டியில் நடைபெறும் கொப் 28 எனப்படும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மூலம், விவசாய நவீனமயமாக்கல், தரவு அமைப்புகள் மற்றும் காலநிலை நிபுணத்துவம் ஆகியவற்றுக்கு தமது ஆதரவை வழங்குவதாக மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் நிறுவுனர் பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.