காலநிலை நீதிமன்றம் தொடர்பான ஜனாதிபதியின் யோசனைக்கு ஐக்கிய நாடுகள் ஆதரவு!

காலநிலை நீதிமன்றம் குறித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யோசனைக்கு ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் வேலைத் திட்டம் ஆதரவு தெரிவித்துள்ளது.

காலநிலை நீதிமன்றம் தொடர்பான ஜனாதிபதியின்  யோசனைக்கு ஐக்கிய நாடுகள் ஆதரவு!

கோப் 28 மாநாட்டில் காலநிலை நீதிமன்றம் தொடர்பான யோசனையை ஜனாதிபதி [02] நேற்று முன்மொழிந்தார்.

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் வேலைத்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் இங்கர் அண்டர்சன் மற்றும் உகாண்டா சுகாதார அமைச்சர் வைத்தியர் அசெங் ஜேன் ரூத் ஆகியோரின் ஆதரவுடன் ஜனாதிபதி இந்த யோசனையை முன்வைத்தார்.

இதனை காலநிலை நீதிமன்றம் காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்துவதற்கு அவசியமான ஒன்றுபட்ட முயற்சிக்காக அனைத்து தரப்புக்களையும் ஒன்றுசேர்க்கும் அர்ப்பணிப்புக்கான முதற்கட்டச் செயற்பாடாகும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

இது அரசாங்களினால் மாத்திரம் முன்னெடுக்ககூடிய செயற்பாடு அல்லவெனவும் அதற்கு தனியார் துறையின் பங்களிப்பு மிகவும் அத்தியாவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நட்டம் மற்றும் இழப்பீட்டுக்கான நிதியத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விடவும் அதிகமான தொகை இஸ்ரேல் மற்றும் காஸா எல்லைகளில் தாக்குதல்களை மேற்கொள்ள செலவிடப்பட்டிருகிறது.

இந்தநிலையில், காலநிலை மாற்றங்களுக்காக நிதி ஒதுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்துவதற்கான நிலையான தீர்வாக காலநிலை நீதிமன்றத்தை முன்மொழிந்திருப்பதால், அதனுடன் இணைந்துகொள்ளுமாறு சகலருக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி முன்மொழிந்துள்ள வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டுச் செல்வதற்கான பங்குதாரர்களுடன் இணைந்து கொள்ளுமாறு ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் வேலைத்திட்டம், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டம், ஐரோப்பிய சங்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை, காலநிலை அனர்த்தங்கள் தொடர்பான பிரச்சினைகளை மட்டுப்படுத்துவதற்காக அனைத்து நாடுகளையும் ஒன்றிணைக்கும் பெரும் சக்தியாக காலநிலை நீதிமன்றம் செயற்படும் எனவும் அதனை தாம் வரவேற்பதாகவும் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் வேலைத்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஒன்கர் அண்டர்சன் தெரிவித்துள்ளார்.