கண்டி - ஹந்தான மலையில் காணாமல் போன 180 மாணவர்களும் மீட்பு!

கண்டி - ஹந்தான மலைக்கு சுற்றுலா சென்ற களனி பல்கலைக்கழகத்தின் ராகம மருத்துவபீடத்தின் 180 மாணவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

கண்டி - ஹந்தான மலையில் காணாமல் போன 180 மாணவர்களும் மீட்பு!

சீரற்ற காலநிலைக்கு மத்தியில், அவர்கள் நேற்று அங்கு சென்றிருந்தனர்.

இதனையடுத்து நேற்றிரவு குறித்த 180 மாணவர்களும் காணாமல் போனதாக பொலிஸார் அறிவித்திருந்ததுடன், அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்தனர்.

அவர்களில் 120 மாணவிகளும், 60 மாணவர்களும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து முன்னெடுத்த 6 மணித்தியால தேடுதலின் பின்னர், குறித்த 180 மாணவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.