விஜயகாந்த் குறித்து தயவு செய்து மிகைப்படுத்திய செய்திகளை பரப்பாதீர்கள் - நாசர்
நடிகர் விஜயகாந்த் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவருக்கு 14 நாட்கள் தொடர் சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இதையடுத்து, விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மூச்சு விடுவதற்கு விஜயகாந்த் சிரமப்பட்டு வருவதால் அவருக்கு மூக்கு வழியாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டதாகவும் அதில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியானது.
இந்நிலையில், விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக நடிகர் சங்க தலைவர் நாசர் கூறியுள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த நாசர், "விஜயகாந்த் நன்றாக இருக்கிறார்.
சில நாட்களாக வந்து கொண்டிருக்கும் செய்தி மிகைப்படுத்தின செய்தி. நாங்கள் தலைமை மருத்துவரை பார்த்தோம். அவர் மிகவும் தெளிவாக 'விஜயகாந்த் வருவார் உங்களை பார்ப்பார்' என்று கூறிவிட்டார்.
அதனால் தயவு செய்து மிகைப்படுத்தின செய்திகளை பரப்பாதீர்கள்" என குறிப்பிட்டுள்ளார்.