இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட பாண்டிச்சேரியின் மீன்பிடி படகுகளை விடுவிக்க பிரதமர் நரேந்திர மோடியின் தலையிட வேண்டும்.
இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட பாண்டிச்சேரியின் மீன்பிடி படகுகளை விடுவிக்க பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டை பாண்டிச்சேரி; மாநில முதல்வர் என்.ரங்கசாமி கோரியுள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று இந்திய பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், காரைக்கால் பகுதி கடற்றொழிலாளர்கள், சில சமயங்களில் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை அறியாமலே கடந்து சென்றதாக கூறியுள்ளார்.
இதன்போதே இலங்கை அதிகாரிகள் அவர்களை கைது செய்து, மீன்பிடி உபகரணங்களை பறிமுதல் செய்தனர்
இதனைத் தொடர்ந்து மத்திய அரசு தரப்பில் தலையிட்டதால் கடற்றொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டனர் என்பதை அவர் நினைவூட்டியுள்ளார்
2019 வரை பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகுகளை இலங்கை அரசு விடுவித்து, அந்த படகுகள் காரைக்காலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
எனினும், 2019க்குப் பிறகு இலங்கை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட படகுகள் விடுவிக்கப்படுவதில்லை.
;கடற்றொழிலாளர்கள்; மட்டும் விடுவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் சுமார் 11 படகுகள் இன்னும் இலங்கை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன.
எனவே பறிமுதல் செய்யப்பட்ட 11 படகுகளையும் விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு முதலமைச்சர் தனது கடிதத்தில் கேட்டுள்ளார்
இலங்கையால் பறிமுதல் செய்யப்பட்டு பாதுகாப்பில் உள்ள படகுகள் இயந்திரமயமாக்கப்பட்ட கப்பல்கள், ஒவ்வொன்றும் 1 கோடி ரூபாய்களுக்கும் அதிகமான மதிப்பை கொண்டனவாகும்.
இந்தப் படகுகளின் இழப்பு கடற்றொழிலாளர்களின்; வாழ்வாதாரத்தை மோசமாக பாதித்துள்ளது என்று பாண்டிச்சேரி முதலமைச்சர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்