தீவிர சிகிச்சையில் இருந்த தாயும்  உயிரிழப்பு!

தீவிர சிகிச்சையில் இருந்த தாயும்  உயிரிழப்பு!

கிளிநொச்சி நகரில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற  டிப்பர் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த  குடும்பத்தில் இரண்டு வயது குழந்தை சம்பவதினம் உயிரிழந்தது.

தந்தை தாய் பிறிதொரு மகள் ஆகியோர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இன்றைய தினம் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் சாவகச்சேரி கல்வயல் பகுதியைச் சேர்ந்த கஜன் யாழினி (34) என்ற இளம் தாயே உயிரிழந்தார்.

தந்தையும் மூத்த மகளும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.