KFC உணவகத்தின் பழுதடைந்த கோழி இறைச்சிகள் அழிக்கப்பட்டுள்ளன!
KFC உடனடி உணவகத்தின் இராஜகிரிய விற்பனை நிலையத்தில் பழுதடைந்த கோழி இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து பொது சுகாதார பரிசோதகர்களினால் அங்கிருந்த கோழி இறைச்சிகள் அழிக்கப்பட்டுள்ளன.
இதனை குறித்த பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார அதிகாரி தரிந்து உறுதிப்படுத்தியுள்ளார்.
தாம் உட்கொண்ட கோழி இறைச்சியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து முறைப்பாடு கிடைத்தது.
இதனையடுத்து குறித்த விற்பனை நிலையத்திற்கு விரைந்து சென்று பழுதடைந்ததாக நம்பப்படும் கோழி இறைச்சியை தமது அதிகாரிகள் அப்புறப்படுத்தியதாக தரிந்து குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், மேலதிக விசாரணைகளுக்காக கோழியின் மாதிரி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதன் முடிவு வெளியாவதற்கு 10 நாட்கள் செல்லலாம் என்று பொது சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.