மின்சார கட்டணத்தை ஜனவரியில் குறைக்க முடியும்!
2024 - ஜனவரி மாதத்தில் மின்சார கட்டணத்தை குறைக்க முடியும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
2024 - ஜனவரி மாதத்தில் மின்சார கட்டணத்தை குறைக்க முடியும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் அறிவித்தலை விடுத்தார்.
தற்போது மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதால் நீர் மின் உற்பத்தி நிலையங்கள் அதிகபட்ச செயற்திறனுடன் இயங்கி வருவதாக இலங்கை மின்சார சபை, தமது அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் மேற்கொள்ளப்படவுள்ள மின் கட்டண திருத்தத்தின் போது, அதிகரித்துள்ள மின்சார கட்டணத்தை குறைக்க முடியும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.