ஐ.நா. உணவு விநியோக மையத்தை தாக்கிய இஸ்ரேல் !
ராஃபாவின் தெற்கு பகுதியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உணவு விநியோக மையத்தை இஸ்ரேல் தாக்கியதில் 5 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த தாக்குதலில் 22 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
ராஃபாவின் தெற்கு பகுதியில் தற்போது நூற்றுக்கணக்கான மக்கள் பட்டினியை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி முதல் தற்போது வரை காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் 31,272 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், 73024 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.