சவுதியில் ஹஜ் யாத்திரிகர் உயிரிழப்பு 1,100 ஐ அண்மித்தது - பலரை காணவில்லை என தகவல்!

சவுதியில் ஹஜ் யாத்திரிகர் உயிரிழப்பு 1,100 ஐ அண்மித்தது - பலரை காணவில்லை என தகவல்!

கடும் வெப்பம் காரணமாக மத்திய கிழக்கு நாடான சவுதியில் ஹஜ் யாத்திரைக்கு சென்ற மக்களின் உயிரிழப்பு எண்ணிக்கை 1,000க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

முஸ்லிம் மக்கள் தங்கள் வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதாக கருதப்படும் புனித ஹஜ் யாத்திரைக்காக, ஆண்டுதோறும் மேற்கு ஆசிய நாடான சவுதி அரேபியாவில் உள்ள மக்கா மற்றும் மதினாவுக்கு செல்வது வழக்கம்.

அந்தவகையில், கடந்த 14ம் திகதி இந்த புனித யாத்திரை ஆரம்பமானது.

இந்நிலையில், கடும் வெப்பத்தால் இந்தியா உட்பட 10க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1,081 ஹஜ் யாத்திரிகர் இறந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதில், அதிகபட்சமாக எகிப்து நாட்டைச் சேர்ந்த 658 பேர் பலியாகி உள்ளனர்.

எனினும், சவுதி அரசு தரப்பில் இறந்தவர்களின் விபரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. 

ஹஜ் யாத்திரை வந்தவர்களில் பலர் காணாமல் போய் உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.