பாப்பரசர் மறைவு – ட்ரம்ப் இரங்கல்

மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸை நினைவுகூரும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
“பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களுக்கு அமைதி உண்டாகட்டும்! கடவுள் அவரையும் அவரை நேசித்த அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!” என்று ட்ரம்ப் தனது சமூக ஊடக வலைத்தளமான ட்ரூத் சோஷியலில் ஒரு சுருக்கமான அறிக்கையை வெளியிட்டு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
பாப்பரசரின் மறைவைத் தொடர்ந்து ட்ரம்ப் அவரை நினைவு கூர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.