விவசாயிகளுக்கான உர மானியம் இன்று!

விவசாயிகளுக்கான உர மானியம் இன்று!

சிறுபோகத்திற்காக ஒன்பது மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்குத் தேவையான உர மானியப் பணம் இன்று அவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என்று கமநல அபிவிருத்தி ஆணையாளர் யூ.பீ. ரோஹண ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதன்படி, உர மானியத்துக்காக 120 மில்லியன் ரூபா பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

இதற்கிடையில், சிறுபோகப் பருவத்தில் நெல் வயல் வேலையைத் தொடங்குவதற்கு முன்பு அனைத்து விவசாயிகளும் எலிக் காய்ச்சலைத் தடுக்க சிகிச்சை பெறுவது அவசியம் என்று சுகாதார அமைச்சகம் வலியுறுத்துகிறது.

உள்ளூர் பொது சுகாதார ஆய்வாளர் அல்லது சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்திடமிருந்து மருந்துகளை இலவசமாகப் பெறலாம் என்று தொற்றுநோயியல் பிரிவின் நிபுணர் வைத்தியர் துஷானி தபரேரா தெரிவித்தார்.

தொடர்ந்து மழை பெய்யும் வானிலை மற்றும் சிறுபோகத்தில் நெல் சாகுபடி தொடங்குவதால், எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது.

இந்த ஆண்டு இதுவரை 3,000 க்கும் மேற்பட்ட எலிக்காய்ச்சல் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளன.