தலவாக்கலை கிறேட்வெஸ்டன்   காட்டுப்பகுதியில் மீட்கப்பட்ட பெண் ஆராய்ச்சிக்காக சென்ற மாணவரா?

தலவாக்கலை - லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேட் வெஸ்டன் கல்கந்தை தோட்டத்தின் ஊடாக செல்லும் இயற்கை வனப்பகுதியில் இனந்தெரியாத இளம் பெண் ஒருவரின் சடலம் ஒன்று நேற்று மாலை கண்டுப்பிடிக்கப்பட்டது.

தலவாக்கலை கிறேட்வெஸ்டன்   காட்டுப்பகுதியில் மீட்கப்பட்ட பெண் ஆராய்ச்சிக்காக சென்ற மாணவரா?

தலவாக்கலை - லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேட் வெஸ்டன் கல்கந்தை தோட்டத்தின் ஊடாக செல்லும் இயற்கை வனப்பகுதியில் அடையாளம் தெரியாத இளம் பெண் ஒருவரின் சடலம் ஒன்று நேற்று மாலை கண்டுப்பிடிக்கப்பட்டது.

கல்கந்தை மலை உச்சி என அழைக்கப்படும் வன பகுதியின் உச்சியில் பெண் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக லிந்துலை மற்றும் தலவாக்கலை பொலிசாருக்கு தகவல் கிடைக்கப்பெற்ற நிலையில் மலை உச்சிக்கு சென்ற பொலிசார் அங்கு தலைக்குப்புற கிடந்த பெண்ணின் சடலத்தை கண்டுபிடித்ததனர்.

அத்துடன் பல்கலைகழக மாணவர்கள் ஆராய்ச்சிக்காக அடிக்கடி கிறேட் வெஸ்டன் கல்கந்தை மலை உச்சிக்கு வருகை தருவார்கள்.

இவ்வாறு வருகை தந்து ஆராய்ச்சி செய்யும் ஒரு சமத்தரை பகுதியில் இந்த சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

25- 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலமே கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்திருக்கும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.