ஹஜ் யாத்திரையில் 550 பேர் உயிரிழப்பு - கடும் வெப்பம் மற்றும் நெரிசல்!

ஹஜ் யாத்திரையில் 550 பேர் உயிரிழப்பு - கடும் வெப்பம் மற்றும் நெரிசல்!

இம்முறை ஹஜ் யாத்திரையின் போது, ஏற்பட்ட நெரிசல் மற்றும் கடும் வெப்பம்  காரணமாக மக்காவில் 550 இஸ்லாமிய யாத்திரிகர்கள் உயிரிழந்ததாக சவூதி அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

உயிரிழந்த 550 பேரில் 323 பேர் எகிப்திய பிரஜைகள் எனவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் நீர்ச்சத்து குறைபாடு உள்ளவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்பமான காலநிலையில் புனித யாத்திரை மேற்கொண்டிருந்த யாத்திரிகர்கள் பலர் சன நெருக்கடி காரணமாக மயக்கமடைந்துள்ளதாக சவூதி அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.