அமெரிக்க மக்களின் ஆதரவு 'முழு வெற்றி பெறும் வரை' போராட உதவும் - இஸ்ரேல்!

அமெரிக்க மக்களின் ஆதரவு 'முழு வெற்றி பெறும் வரை' போராட உதவும் - இஸ்ரேல்!

அமெரிக்காவில் இஸ்ரேலுக்கான மக்கள் ஆதரவு, ஹமாஸ் மீதான போரில் 'முழு வெற்றி பெறும் வரை' போராட உதவும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை விடுத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தமது அறிக்கையில் காசாவில் மோதலின் போது 80 சதவீதக்கும் அதிகமான அமெரிக்கர்கள் இஸ்ரேலை ஆதரிப்பதாக கருத்துக் கணிப்புகளை மேற்கோள்காட்டியுள்ளார்.

போரில் இஸ்ரேல், உலகளாவிய ஆதரவை இழக்கும் அபாயம் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்ததை அடுத்து இஸ்ரேல் பிரதமர் குறித்த அறிக்கையை விடுத்துள்ளார்.

போர்நிறுத்த உடன்படிக்கைக்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்படும் என அமெரிக்கா நம்புவதாக ஜனாதிபதி ஜோ பைடன் முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.