இலங்கையின் கடனை விரைவாக மறுசீரமைக்க உலக வங்கி அழைப்பு
*இலங்கையின் கடனை விரைவாக மறுசீரமைக்க உலக வங்கி அழைப்பு*
இலங்கையின் கடனை விரைவாக மறுசீரமைக்குமாறு உலக வங்கி அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கை மற்றும் ஏனைய நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கு விரைவான கடன் மறுசீரமைப்பு தேவைப்படுவதாக உலக வங்கியின் தலைவர் டேவிட் மெல்பாஸ் தெரிவித்தார்.
இந்தியாவின் பெங்களுரில் இடம்பெற்ற ஜி20 நாடுகளின் மாநாட்டில் கலந்துக் கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சாம்பியா புரிந்துணர்வு ஒப்பந்தம், கானா உத்தியோகப்பூர்வ கடனாளிகள் குழு, எத்தியோப்பியா மறுசீரமைப்பு மற்றும் இலங்கையின் நிதி உறுதிப்பாடுகள் போன்ற தீர்வுகளை அடைய அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு உடன்பாடு ஏற்பட்டால் அடுத்த சில மாதங்களில் குறித்த செயற்பாடுகள் அனைத்தும் செய்யப்படலாம் என உலக வங்கியின் தலைவர் டேவிட் மெல்பாஸ் தெரிவித்தார்.
சிக்கலான நிலையில் இருந்து முன்னோக்கி செல்லக் கூடிய வகையில் ஒரு செயன்முறையை கண்டறிய வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.