மகிந்தவுக்காக பிரதமர் பதவி விலகுவதாக வதந்தி
தமது பதவியில் இருந்து பிரதமர் தினேஷ் குணவர்தன விலகவுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானதென பிரதமரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
அவ்வாறே, பதவியிலிருந்து விலகுமாறு எந்த தரப்பினராலும் கோரிக்கையோ அல்லது அழுத்தமோ பிரதமருக்கு வழங்கப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறான வதந்திகள், இந்த அரசாங்கத்தின் திட்டங்களை நாசப்படுத்துவதற்கான சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று பிரதமரின் ஊடக பிரிவு மேலும் கூறுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகிருந்தன.
இந்தநிலையிலேயே, இவ்வாறானதொரு அறிவிப்பை பிரதமரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.