விமல் வீரவங்ச மற்றும் தமிழ்க் கட்சிகளுடன் கலந்துரையாடப்படும் - டலஸ் அழகப்பெரும 

தமிழ் தேசிய கூட்டமைப்பு  மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தலைமையிலான உத்தர லங்கா சபாகய ஆகிய தரப்புகளுடன் என்பவற்றுடன் எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடல்களை நடத்த எதிர்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமைத்துவம் வகிக்கும் சுதந்திர மக்கள் சபை தெரிவித்துள்ளது.

விமல் வீரவங்ச மற்றும் தமிழ்க் கட்சிகளுடன் கலந்துரையாடப்படும் - டலஸ் அழகப்பெரும 

அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

அண்மைய நாட்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பவற்றுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நிலவும் நெருக்கடியான நிலையை அடுத்து எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் தேர்தல் நடத்தப்படுமா? இல்லையா? என்ற நிச்சயமற்ற நிலை உள்ளது.

மாகாண சபை தேர்தலுக்கு என்ன நடந்தது என அனைவரும் அறிவார்கள்.

இந்தநிலையில், எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தல்களிலும் அவ்வாறான நிலை ஏற்பட்டால் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். 

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள, புதிய கூட்டணிக்கு தலைமை தாங்கும் பொறுப்பு அனுர பிரியதர்ஷன யாப்பாவுக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் அதிகாரம் உட்பட சகல பொறுப்புக்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் யாப்பாவிடம் ஒப்படைக்கும் யோசனை, நாடாளுமன்ற உறுப்பினர் லன்சா மற்றும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோரால் முன்வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் கொழும்பு, புத்தளம் மற்றும் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் இந்தக் கூட்டணியில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.