வேட்பு மனுவில் பெயர் நீக்கப்பட்டமையினால் நீதிமன்றம் செல்வேன் என்கிறார் நடிகை தமிதா!
இரத்தினபுரி வேட்புமனு பட்டியலில் இருந்து தனது பெயர் நீக்கப்பட்டதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நடிகை தமிதா அபேரத்ன தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்ட செயலகத்திற்கு அருகில் நேற்று (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தேர்தலில் போட்டியிட தன்னை முன்னிறுத்திய நபரே தமக்கு எதிராக செயற்பட்டதாக தெரிவித்தார்.மேலும் கருத்து தெரிவித்த அவர்,
ஹேஷா விதான சகோதரர் என்னிடம் ஒரு கோரிக்கை வைத்தார், சகோதரி தமிதா, நீங்கள் ஏன் இரத்தினபுரியில் போட்டியிடக் கூடாது.
நான் எங்கு கேட்பது என்று யோசிக்கவில்லை என்றேன். அதற்கு இல்லை அக்கா, நான் உங்களை இங்கு போடுகிறேன், இங்கு பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லை என்றார்.
நீங்கள் முன்மொழிந்தால் நான் வருகிறேன் என்றேன்.
அப்படித்தான் எனது பெயர் வந்தது. அதனை இல்லை என்று கூறினால் என்னிடம் ஆதாரம் உள்ளது.
நேற்று எனது பெயர் விடுபட்டதாக செய்தி கிடைத்தது. என் பெயர் மாற்றப்பட்டுள்ளது என்று. நான் ஆதாரத்துடன் பேசுகிறேன்.
இந்த ஆதாரங்கள் அனைத்தையும் ஊடகங்கள் முன் காட்டத் தயாராக உள்ளேன்.
எனக்கு பரிந்துரைத்த அதே நபர் என் காலை வாரினார். நான் நீதிமன்றம் செல்வேன். எனது அடிப்படை உரிமைகள் தெளிவாக மீறப்பட்டுள்ளன” என்றார்.