ரணில் தமிழ் பௌத்தத்தை பகிரங்கமாக அங்கீகரித்தமை சாதகமான செயற்பாடு - மனோ கணேசன்
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் பௌத்தத்தை பகிரங்கமாக அங்கீகரித்தமை சாதகமான செயற்பாடு என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் பௌத்தத்தை பகிரங்கமாக அங்கீகரித்தமை சாதகமான செயற்பாடு என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி, தமிழ் பௌத்தத்தை வரலாற்று உண்மையாக அங்கீகரிப்பது 'பல முட்டுக்கட்டைகளுக்கு திறவுகோல்' என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இன்று ட்வீட் செய்துள்ளார்.
வடக்கு கிழக்கில் காணி கையகப்படுத்தல் செயற்பாடுகள் தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அண்மையில் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுர மனதுங்கவுடன், கடுமையான கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து மனதுங்க தனது பதவி விலகலை கையளித்ததாக புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, உறுதிப்படுத்தினார்.
எனினும் அவரின் பதவி விலகலுக்கான காரணத்தை அமைச்சர் தெரிவிக்கவில்லை.