இன்டர்போலின் சிவப்பு பட்டியலில் தப்பியோடிய இலங்கையர்களின் பெயர்கள்

இன்டர்போலின் சிவப்பு அறிவிப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள தப்பியோடிய 6,872 பேரில் இலங்கையர்களும் உள்ளடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்டர்போலின் சிவப்பு  பட்டியலில்   தப்பியோடிய இலங்கையர்களின் பெயர்கள்

இன்டர்போலின் சிவப்பு அறிவிப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள தப்பியோடிய 6,872 பேரில் இலங்கையர்களும் உள்ளடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏழு பேரில், நான்கு இலங்கையர்கள் இலங்கையில் 'தேடப்படுபவர்கள்' என்று பட்டியலிடப்பட்டுள்ளனர், 

ஏனைய மூன்று இலங்கையர்கள் தங்கள் பிரதேசங்களில் செய்த குற்றங்கள் தொடர்பாக வெளிநாடுகளால் செய்யப்பட்ட கோரிக்கைகளின் பேரில் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இன்டர்போலின் சிவப்பு அறிவிப்பு என்பது, நாடுகடத்தப்படுதல், சரணடைதல் அல்லது அதுபோன்ற சட்ட நடவடிக்கை நிலுவையில் உள்ள ஒருவரைக் கண்டுபிடித்து, கைது செய்ய, உலகெங்கிலும் உள்ள சட்ட அமுலாக்க அதிகாரிகளிடம் கோருவதாகும்.

இன்டர்போலின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, இலங்கையர்களான, 38 வயதான டி சொய்சா ஜகமுனி சுஜீவா என்ற கொஸ்கொட சுஜீ, 48வயதான நடராஜா சிவராஜா, 50வயதான 

பொதுவாக காணாமல் போனவர்களை, பெரும்பாலும் சிறார்களைக் கண்டறிய உதவுவதற்காக அல்லது அடையாளம் காண முடியாதவர்களை கண்டறிய உதவுவதற்காக மஞ்சள் அறிவிப்புகள் வழங்கப்படுகின்றன. 

அதன்படி, 31 வயதான பாலகிருஷணன் நிரேஷ் என்பவர் வவுனியாவில் 202 ஜனவரி 27 இல் காணாமல் போனதையும், 68 வயதாக வீபத்தே ரலலகே சமன் விஜேசிறி என்பவர் 2018 ஒக்டோபர் 13 இல் காணாமல் போனதையும் சர்வதேச காவல்துறையினர் பட்டியலிட்டுள்ளனர்.

20 வயதான கயிந்து கித்முக மதுரப்பெரும என்பவர் தனது 5ஆவது வயதில் கொழும்பில் காணாமல் போயுள்ளார்.