சாணக்கியனின் கருத்து எனது சிறப்புரிமையை மீறும் செயல் - அலி சப்ரி

தாம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வீடு ஒன்றை வழங்கியதாக இராசமாணிக்கம் சாணக்கியன் கூறியமை, தமது சிறப்புரிமையை மீறும் செயல் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பிய நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, வெளிவிவகார அமைச்சரின் உத்தியோகபூர்வ வீடு வழங்கப்பட்டமை தொடர்பில், சாணக்கியன் நேற்று சுமத்திய குற்றச்சாட்டு தொடர்பிலேயே அலி சப்ரி தமது சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பினார்.

தாம் அரச வீட்டில் இதுவரை தங்கியிருக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், வரி செலுத்தி நிர்மாணித்த வீட்டிலேயே வசித்து வருவதாக குறிப்பிட்டார்.

இந்தநிலையில், நாட்டின் பிரிவினையை விரும்பும் சர்வதேசத்தில் இயங்கும் சிலரின் கூலிக்காக தம்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக சப்ரி தெரிவித்தார்.

அரசாங்கம் மேற்கொண்டு வரும் அமைதி நடவடிக்கைகளை குழப்பும் வகையிலேயே இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது.

எனினும், அரசாங்கத்தின் அமைதி நடவடிக்கைகள் தொடரும் எனவும் அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டார்.