மீண்டும் இணைய போகும் விஜய் - ஜோதிகா | விஜய் 68 திரைப்படத்தின் ஸ்பெஷல் என்ன?
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.
இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 68ஆவது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்காலிகமாக 'தளபதி 68' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் 2024 ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.
இதையடுத்து இப்படம் குறித்த பல தகவல்கள் வெளியாகி வருகிறது. அண்மையில் விஜய்க்கு வில்லனாக இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கவுள்ளதாகவும் இது குறித்து படக்குழு அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய் -ஜோதிகா இணைந்து நடித்த 'குஷி', 'திருமலை' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து தற்போது விஜய்யுடன் ஜோதிகா மீண்டும் நடிக்கவுள்ளதாக பரவிய தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.