விஜய் படத்திலிருந்து வெளியேறிய அஜித்!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவரும் இணைந்து ராஜாவின் பார்வையிலே படத்தில் நடித்திருந்தனர்.
இதன்பின், நேருக்கு நேர் படத்தில் விஜய் - அஜித் இணைந்து நடித்து வந்த நிலையில், 10 நாட்கள் படப்பிடிப்பிற்கு பின் அஜித் இப்படத்திலிருந்து விலகினார். அஜித் விலகியதன் காரணமாக, அந்த கதாபாத்திரத்தில் வேறு யாரை நடிக்க வைக்கலாம் படக்குழு யோசித்து வந்துள்ளனர்.
அப்போது அஜித் நடித்த கதாபாத்திரத்தில் பிரசாந்தை நடிக்க கேட்டுள்ளனர். ஆனால், ஷங்கரின் ஜீன்ஸ் படத்தில் நடித்து கொண்டு இருந்த பிரசாந்த், நேருக்கு நேர் படத்தை நிராகரித்துள்ளார்.
இதன்பின், பிரபு தேவாவை கேட்டுள்ளனர். ஒரு ஹீரோவை தூக்கிட்டு அந்த கதாபாத்திரத்தில் நான் நடிக்க மாட்டேன் என பிரபு தேவா கூறியுள்ளார். அதன்பின் சிவகுமார் மகன் சரவணன் இந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பவர் என தேர்ந்தெடுத்தார்களாம்.
அவர் தான் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சூர்யா. இந்த தகவலை மறைந்த இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.