அயோத்தி இராமர் கோவிலுக்கு செல்லும் நாமல் ராஜபக்ச!

அயோத்தி இராமர் கோவிலுக்கு செல்லும் நாமல் ராஜபக்ச!

அயோத்தி ராமர் கோவில் அண்மையில் மக்கள் தரிசனத்துக்காக அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட நிலையில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அயோத்திக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி நாளை (09) மாலை அவர் ராமர் கோவிலில் சிறப்பு தரிசனம் மற்றும் பூஜையில் கலந்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுடில்லிக்கு 2 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே அவர் அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்லவுள்ளார்.

கலாசார மற்றும் மத உறவு

இந்த விஜயத்தின் போது அவர் அயோத்தி மற்றும் டெல்லியில் உயரதிகாரிகளை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.