தமிழ் தேசிய பிரச்சினையே பொருளாதார நெருக்கடிக்கு அடிப்படை காரணி - சுமந்திரன் சாடல்!
தமிழ் தேசிய பிரச்சினையே இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் அடிப்படையாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம்சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற ஜனாதிபதியின் அக்கிராசன உரை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் ஜனாதிபதி தமது உரையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எந்தவித கருத்தையும் முன்வைக்கவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.