பாகிஸ்தானின் இடைக்கால பிரதமரின் பெயர் இன்று முடிவு செய்யப்படும்!
பாகிஸ்தானின் இடைக்கால பிரதமரின் பெயர் இன்று (12) இறுதி செய்யப்படும் என பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

இறுதி தீர்மானத்தை எடுப்பதற்கு முன்னர் கூட்டணியில் உள்ள பங்காளி கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் கோரிக்கைக்கு அமைய பாகிஸ்தான் ஜனாதிபதி அந்த நாட்டு நாடாளுமன்றத்தை கலைத்துள்ளார்.
இதனையடுத்து, தற்காலிக பிரதமர் பதவிக்காக 6 பேரின் பெயர்கள் தற்போது தெரியவாகியுள்ளன.
பாகிஸ்தான் அரசியலமைப்பிற்கு அமைய இடைக்கால பிரதமரை தேர்வு செய்வதற்காக அந்த நாட்டு பிரதமருக்கும் எதிர்கட்சி தலைவருக்கும் 3 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும்.
எனினும் இடைக்கால பிரதமர் தெரிவு செய்யப்படும் வரை ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக செயற்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.