சிங்கராஜா வனத்தில் நுழைந்த ஈரானிய பிரஜைகளுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம்!
சிங்கராஜா வனப்பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்து சட்டவிரோதமாக சேகரித்த பூச்சிகள், தாவர பாகங்கள் மற்றும் காளான்கள் உள்ளிட்ட உயிரற்ற மாதிரிகளுடன் கைது செய்யப்பட்ட மூன்று ஈரானிய பிரஜைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்களை அங்கு அழைத்துச் சென்ற இலங்கை பிரஜையான சாரதிக்கு பிணையும் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஈரானிய பிரஜைகளுக்கு ஒரு கோடியே முப்பத்திரண்டு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு நேற்று உடுகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அவர்களுக்கு எதிராக 44 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
ஒவ்வொரு நபருக்கும் ஒரு குற்றச்சாட்டிற்காக தலா 10 ஆயிரம் ரூபா விகிதம் 44 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மூன்று சந்தேக நபர்களுக்கும் ஒரு கோடியே முப்பத்திரண்டு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த அபராதத் தொகையை ஏற்றுக்கொள்ளாவிட்டால், ஒவ்வொருவருக்கும் தலா 5 மாத காலச் சிறைத்தண்டனையும், 2 வருட கடூழியச் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என நீதவான் தெரிவித்துள்ளார்.