உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!
இன்று நள்ளிரவு முதல் உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி கொத்து, ப்ரைட் ரைஸ் ஆகியன 50 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தேநீர் 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பால் தேநீர் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிற்றுண்டிகள் 10 ரூபாவினாலும் சோற்றுப்பொதி 25 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.