பால்மா விலை குறைப்பு - 328 பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கம்!
லங்கா சதொச நிறுவனம் அத்தியாவசிய பொருட்கள் விலைக்குறைப்பின் கீழ் பால்மாவின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளது.
லங்கா சதொச நிறுவனம் அத்தியாவசிய பொருட்கள் விலைக்குறைப்பின் கீழ் பால்மாவின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளது.
நாளை முதல் அமுலாகும் வகையில் 400 கிராம் பால்மாவின் விலை 31 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 400 கிராம் பால்மா 999 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
இதனிடையே, இன்று(20) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 328 பொருட்கள் மீதான இறக்குமதி தடை நீக்கப்படவுள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு (20) வெளியிடப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.