இலங்கை ஜனாதிபதி  இந்தியா நோக்கி பயணமானார்!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமாக இன்று பிற்பகல் இந்தியா நோக்கி சென்றுள்ளார். 

இலங்கை ஜனாதிபதி  இந்தியா நோக்கி பயணமானார்!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமாக இன்று பிற்பகல் இந்தியா நோக்கி சென்றுள்ளார். 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் அவர் இரண்டு நாட்களுக்கு இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்த பயணத்தின் போது இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்வார். 

ஜனாதிபதியின் இந்திய பயணத்தின் போது அவரின் கீழ் உள்ள அமைச்சுக்களின் பொறுப்புகள், இராஜாங்க அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 

அத்துடன், அவர் இந்தியாவில் இருக்கும் தருணத்தில் பல தரப்பு சந்திப்புகளை மேற்கொள்வார் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தமிழ் அரசியல் தரப்பினர் இந்திய பிரதமருக்கு தொடர்ச்சியாக எழுதிய கடிதங்களின் அடிப்படையில் அவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன், தமிழர் தரப்பு பிரச்சினைகள் குறித்து வலியுறுத்துவார் என நம்பப்படுகிறது.

update >>

இந்தியாவுக்கு பயணமான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை புது டெல்லியை சென்றடைந்தார்.

பிற்பகல் 01:43 க்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் யூ.எல். 195 என்ற விமானத்தில் இந்தியாவுக்குப் புறப்பட்ட ஜனாதிபதி, மாலை 05 மணியளவில் புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை அடைந்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.