பரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க 6 இலங்கையர்களுக்கு வாய்ப்பு!

பரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க 6 இலங்கையர்களுக்கு வாய்ப்பு!

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் ஆரம்பமாகவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு இலங்கையைச் சேர்ந்த 6 வீர வீராங்கனைகளுக்கு கிடைத்துள்ளது.

அதன்படி, பெட்மிண்டன் வீரர் வீரேன் வெத்தசிங்க முதல் முறையாக ஒலிம்பிக் தகுதியை பெற்றுள்ளார்.

அதனையடுத்து, பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டிக்கான செயலாளர் நதிஷா தில்ஹானியும், பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டிக்கான தருஷி கருணாரத்னவும் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

அத்துடன், ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் அருண தர்ஷன் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளதுடன், கைல் அபேசிங்க மற்றும் கங்கா செனவிரத்ன ஆகியோர் நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இதன்படி, இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் - பரிஸ் நகரில் ஓகஸ்ட் 26 முதல் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.