ஐபிஎல் தொடரில்  இனி 'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்' கிடையாது என - அணி நிர்வாகம் எடுத்த திடீர் முடிவு!

ஐபிஎல் தொடரில்  இனி 'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்' கிடையாது என - அணி நிர்வாகம் எடுத்த திடீர் முடிவு!

10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 22ஆம் திகதி  தொடங்கவுள்ளது. சென்னையில் இடம்பெறவுள்ள  முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோதவுள்ளன. நடப்பு சாம்பியன் என்ற பட்டத்தை தக்கவைக்கும் முயற்சியில் சிஎஸ்கே அணியும் இம்முறையாவது கோப்பையை வென்றுவிடவேண்டும் என்ற முனைப்பில் ஆர்சிபி அணியும் களம் காண உள்ளன.

இந்நிலையில் அணியின் பெயர் தொடர்பாக ஆர்சிபி அணி நிர்வாகம் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என இவ்வளவு நாட்களாக இருந்துவந்த பெயரை இத்தொடர் முதல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என மாற்ற முடிவு செய்து, அதிகாரப்பூர்வமாக பெயரும் மாற்றப்பட்டுள்ளது.

 2008 முதல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடிவரும் ஆர்சிபி அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்ற பெயரிலேயே விளையாடிவந்தது. இதற்கிடையே 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கர்நாடக மாநில தலைநகரான பெங்களூர், பெங்களூரு என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

ஆனாலும் ஆர்சிபி அணி தனது பழைய பெயரிலேயே தொடர்ந்து விளையாடி  வந்தது. இந்நிலையில் தான் தற்போது இந்த பெயர் மாற்றப்பட வேண்டும் என்ற  முடிவுக்கு வந்தது