அவுஸ்திரேலிய வீரரின் அநாகரீக செயலால் கொதித்தெழும் கிரிக்கெட் ரசிகர்கள்!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் மார்ஷின் செயல் காரணமாக கிரிக்கெட் ரசிகர்கள் கொதித்தெழுந்துள்ளார்கள். அத்துடன் அவரின் செயல் குறித்து பலரும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய வீரரின் அநாகரீக செயலால் கொதித்தெழும் கிரிக்கெட் ரசிகர்கள்!

உலகக் கிண்ண கிரிக்கட்டில் வெற்றிப்பெற்ற பின்னர், அந்த கிண்ணத்தின் மீது சாதாரணமாக தனது கால்களை வைத்து ஓய்வெடுக்கும் அவரின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதனை பலரும் 'உலக கிண்ண கிரிக்கட்டுக்கு அவமரியாதை' என்று முத்திரை குத்தியுள்ளனர். 

அணியின் தலைவர் பெட் கம்மின்ஸால் பகிரப்பட்ட இந்தப் புகைப்படம் விரைவாக பல்வேறு தளங்களில் பரவி விமர்சனங்களையும் தோற்றுவித்துள்ளது. 

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியா உலகக் கிண்ணத்தை வென்ற சிறிது நேரத்திலேயே இந்த புகைப்படம் வெளிப்பட்டுள்ளது. இதன் ஊடாக அவுஸ்திரேலியா உலகக் கிண்ண கிரிக்கெட்டை தமது காலணிக்கு சமனாக மதிப்பதாகவே பலர் தமது கருத்துக்களை முன் வைத்துள்ளனர்.

 குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போன்று அதன் பெறுமதி அறியாத ஒரு அணிக்கு கிண்ணம் கிடைத்தமை கிரிக்கெட் ரசிகர்களை பெறும் வருத்தத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

உலகுக் கிண்ண இறுதிப் போட்டியை நடத்துவதற்கு இந்தியா பாரிய ஏற்பாடுகளை மேற்கொண்டதோடு ஆரம்ப நிகழ்வாக இந்திய வான்படைனர் வான் சாகசங்களை மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிக்கு தமது மரியாதையை அளித்திருந்தார்கள்.

அத்துடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவுஸ்திரேலியாவின் அரசியல் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டு வெற்றிக்கிண்ணத்தை வழங்கி வைத்திருந்தனர்.

 இந்த நிலையில் அவுஸ்திரேலிய வீரரின் செயற்பாடு அனைவரையும் அவமரியாதைக்கு உள்ளாக்கும் அநாகரிகமான செயற்பாடு என விளையாட்டு விமர்சகர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.