இலங்கை - சிம்பாப்வே முதலாவது ஒருநாள் கிரிக்கெட் இன்று!

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இலங்கை - சிம்பாப்வே முதலாவது ஒருநாள் கிரிக்கெட் இன்று!

கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 2.30 அளவில் இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிசங்க, சிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

டெங்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டமையை அடுத்து அவர் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.