முதலாவது சதத்தை பதிவுசெய்தார் ஜனித் லியனகே

முதலாவது சதத்தை பதிவுசெய்தார் ஜனித் லியனகே

பங்களாதேஷ் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அணி 50 ஓவர்கள் நிறைவில் 235 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் ஜனித் லியனகே சதம் விளாசினார்.

102 பந்துகளை சந்தித்த அவர் 2 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகள் அடங்கலாக 101 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

அத்துடன் இது இவருடைய முதலாவது சர்வதேச சதம் என்பது குறிப்பிடத்தக்கது.