நியூஸிலாந்து மகளிர் அணி T20 சம்பியனானது!
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்காவை 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து தனது முதல் மகளிர் T20 உலகக் கிண்ணத்தை வென்றது.
2009, 2010 இல் இரண்டு இறுதிப் போட்டிகளில் தோல்வியுற்ற நியூசிலாந்து, அதன் பின்னர் பல தோல்விகளுக்குப் பிறகு, கிவிஸ் மகளிர் சம்பியனானது.
முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்கள் எடுத்தது.
159 என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய தென்னாபிரிக்கா 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ஓட்டங்கள் எடுத்தது.
ஆட்டநாயகி, தொடர்நாயகி ஆகிய இரண்டு விருதுகளையும் நியூஸிலாந்தின் அமெலியா கெர் பெற்றார்.