ஆப்கானிஸ்தான் அணியை 149 ஓட்ட எண்ணிக்கையில் வென்ற நியூஸிலாந்து!

உலக கிண்ணத் தொடரின் இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து ஆகிய அணிகள் இன்று மோதின.

ஆப்கானிஸ்தான் அணியை 149 ஓட்ட எண்ணிக்கையில் வென்ற நியூஸிலாந்து!

இன்று பிற்பகல் சென்னை மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 288 ஓட்டங்களை பெற்றுள்ளது. 

 நியூஸிலாந்து அணி சார்பில் Glenn Phillips அதிகப்பட்சமாக 71 ஓட்டங்களை பெற்றதுடன் அணியின் தலைவர் Tom Latham 68 ஓட்டங்களையும் Will Young 54 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் Naveen-ul-Haq, Azmatullah Omarzai தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்கள்.

 இந்தநிலையில், 289 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி வரையில் 34.4 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 139 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

அந்த அணி சார்பில் Rahmat Shah அதிகபட்சமாக 36 ஓட்டங்களை பெற்றதுடன் Ikram Alikhil ஆட்டமிழக்காமல் 19 ஓட்டங்களை பெற்றார். 

பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் Mitchell Santner மற்றும் Lockie Ferguson ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். 

இதன்படி நியூஸிலாந்து அணி 149 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

 நியூசிலாந்து அணி இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளிலும் வெற்றிப்பெற்று புள்ளிப்பட்டியிலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.