இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி வெற்றி!

நியூஸிலாந்து மகளிர் அணிக்கும் பாகிஸ்தான் மகளிர் அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி 10 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது.

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில்  பாகிஸ்தான் மகளிர் அணி வெற்றி!

நியூஸிலாந்தில் இடம்பெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து மகளிர் அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது. 

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய, பாகிஸ்தான் மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

 அதற்கமைய, 138 எனும் வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 127 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

இந்தநிலையில் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் 2 க்கு 0 எனும் அடிப்படையில் பாகிஸ்தான் மகளிர் இருபதுக்கு 20 தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.