யாழ் இந்துக் கல்லூரி 9 ஓட்டங்களால் வெற்றி வாகை சூடியது!

இந்துக்களின் பெருஞ்சமரில் கொழும்பு இந்துக் கல்லூரிக்கு எதிரான போட்டியில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 9 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

யாழ் இந்துக் கல்லூரி 9 ஓட்டங்களால் வெற்றி வாகை சூடியது!

இந்துக்களின் பெருஞ்சமரில் கொழும்பு இந்துக் கல்லூரிக்கு எதிரான போட்டியில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 9 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்துக்களின் பெருஞ்சமர் என வர்ணிக்கப்படும், கொழும்பு இந்துக் கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி 12ஆவது தடவையாக கொழும்பு பீ சரவணமுத்து விளையாட்டு மைதானத்தில் நேற்று ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு இந்துக் கல்லூரி அணி, முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

இதற்கமைய, தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர், தமது முதலாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு இந்துக் கல்லூரி அணி, 49 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதையடுத்து, ஃபலோவன் முறையில் தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு இந்துக் கல்லூரி அணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து, 170 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் கொழும்பு இந்து கல்லூரி சார்பில் ஆர். டிலுக்சன் 72 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சார்பாக ரீ.கஜநாத் 71 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை பெற்றுக்கொடுத்தார்.

பின்னர், 37 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி தமது இரண்டாம் இன்னிங்சில் துடுப்பாடிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து, 38 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் கே.பரிசித் தெரிவானார்