அவசரமாக நாடு திரும்பிய ரபாடா - ஐ.பி.எல் 2025

அவசரமாக நாடு திரும்பிய ரபாடா - ஐ.பி.எல் 2025

ஐ.பி.எல் 2025 கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வந்த தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா சொந்த நாடு திரும்பியுள்ளார். 

முக்கியமான தனிப்பட்ட காரணமாக ரபாடா சொந்த நாடு திரும்பியதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் எப்போது இந்தியா திரும்பி மீண்டும் அணியில் இணைவார் என்பதை தெரிவிக்கவில்லை.

ரபாடா குஜராத் அணிக்காக முதல் இரண்டு போட்டிகளில் விளையாடினார். பஞ்சாப் அணிக்கெதிராக 41 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். மும்பைக்கு எதிராக 42 ஓட்டங்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். ஆர்.சி.பி-க்கு எதிராக சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற 3ஆவது போட்டியில் பங்கேற்கவில்லை.

ரபாடாவுக்குப் பதிலாக அர்ஷத் கான் களம் இறங்கினார். இவர் விராட் கோலியை வீழ்த்தினார்.

குஜராத் அணியில் கோயட்சே, கிளென் பிளிப்ஸ் ஆகியோர் இன்னும் வாய்ப்பு கிடைக்காமல் வெளியில் உள்ளனர். கோயட்சே இன்னும் முழுத்தகுதி பெறவில்லை எனக் கூறப்படுகிறது.