கொக்கேய்ன் விநியோகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஆஸி. முன்னாள் வீரர்!

கொக்கேய்ன் விநியோகத்தில் ஈடுபட்டதற்காக அவுஸ்திரேலியாவின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் மெக்கில் (Stuart MacGill), சிட்னி நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.
54 வயதான அவர், போதைப்பொருளின் வணிக விநியோகத்தில் ஈடுபட்டதாக சிட்னி நீதிமன்றம் வியாழக்கிழமை (13) அறிவித்தது.
மெக்கில், கொக்கேயின் பயன்படுத்தியதையும், தனது நண்பரின் சகோதரனை தனது போதைப்பொருள் வியாபாரிக்கு அறிமுகப்படுத்தியதையும் ஒப்புக்கொண்டதாக அவுஸ்திரேலியாவின் அரச ஒளிபரப்பாளர் ஏபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
பின்னர் இந்த ஜோடி 330,000 அவுஸ்திரேலிய டாலர் (£ 160,000) பெறுமதியான கொக்கேயினுக்கு ஒரு ஒப்பந்தம் செய்ததாக சட்டத்தரணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
அவுஸ்திரேலியாவுக்காக 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 208 விக்கெட்டுகளை வீழ்த்திய 54 வயதான முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மெக்கில், மே மாதம் தண்டனைக்காக நீதிமன்றில் ஆஜராகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.