முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி 

முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி 

சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 172 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

வெலிங்டன், பேசின் ரிசேவ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் அவுஸ்திரேலிய அணி தமது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 383 ஓட்டங்களை பெற்றது.

இதனையடுத்து, துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக 179 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இந்தநிலையில், தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 196 ஓட்டங்களை பெற்று, 369 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதற்கமைய, தமது இரண்டாவது இன்னிங்ஸில், வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 164 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக அவுஸ்திரேலிய அணியின் கெமரன் க்றீன் தெரிவானார்.

அதேவேளை, நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ் வரலாற்று சாதனை ஒன்றையும் நிகழ்தியுள்ளார்.

முதலாவது இன்னிங்சில் 71 ஓட்டங்களை பெற்றதுடன், 5 விக்கட்டுக்களை வீழ்தியுள்ளார்.

இதன் மூலம் ஒரே டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை செய்த முதலாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.