குஜராத் டைட்டன்ஸ் அணி 6 ஓட்டங்களினால் வெற்றி
ஐபிஎல் தொடரின் 5ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது.
குறித்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பில் சாய் சுதர்சன் 46 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இந்த நிலையில் 167 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.