டெல்லி கெப்பிட்டல்ஸ் மகளிர் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம்!

டெல்லி கெப்பிட்டல்ஸ் மகளிர் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம்!

மகளிர் பிரிமியர் லீக் தொடரில் இதுவரை இடம்பெற்றுள்ள போட்டிகளின் அடிப்படையில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது.

8 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கின்றது.

இரண்டாம் இடத்தில் உள்ள மும்பை இந்தியன் மகளிர் அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் உள்ளது.

ரோயல்ஸ் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி 8 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் உள்ளது.

இந்தநிலையில், நாளை இடம்பெறவுள்ள வெளியேற்றும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களுர் ரோயல்ஸ் செலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

குறித்த போட்டியில் வெற்றி பெறும் அணியானது, டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ளவுள்ளது.