தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு!

கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தென்னாப்பிரிக்காவிற்கு செல்லவுள்ள இந்திய அணி அங்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 ஆகிய மூன்று தொடர்களிலும் விளையாடவுள்ளது.

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு!

கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  தென்னாப்பிரிக்காவிற்கு செல்லவுள்ள இந்திய அணி அங்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 ஆகிய மூன்று தொடர்களிலும் விளையாடவுள்ளது.

இந்த மூன்று தொடர்களிலும் விளையாடும் இந்திய குழாம் தொடர்பான விபரங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை நேற்று அறிவித்தது.

ரோஹித் சர்மா தலைமையில் டெஸ்ட் குழாமும், கே.எல் ராகுல் தலைமையில் ஒருநாள் குழாமும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இருபதுக்கு 20 குழாமும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒருநாள் தொடர்களில் ஓய்வு கோரியதை அடுத்து, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் குழாமில் மாத்திரம் இணைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் மீண்டும் டெஸ்ட் குழாமில் இணைந்துள்ளனர்.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சன், திலக் வர்மா, ரஜத் படிதார் என இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

காயத்தின் தன்மையைப் பொறுத்து மொஹமட் ஷமி விளையாடுவது உறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயத்திலிருந்து ஹர்திக் பாண்டியா இன்னும் குணமடையாத நிலையில், இந்திய இருபதுக்கு 20 அணியின் தலைவராக சூர்யகுமார் யாதவ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ராகுல் டிராவிட் தலைமையிலான பயிற்சியாளர்கள் குழுவின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது பணியானது இந்த தொடருடன் ஆரம்பிக்கவுள்ளது

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 தொடர் எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.