தனுஷ்க குணதிலக்கவிற்கு மீண்டும் கிரிக்கெட் வாய்ப்பு - அவுஸ்திரேலிய பெண் வழக்கில் சாதகம்!
இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலக்க, அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக குற்றஞ்சுமத்தப்பட்ட வழக்கிலிருந்து பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு இன்று சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
சாட்சி கோரல்கள் மற்றும் எழுத்துமூல சமர்ப்பணங்களையும் பரிசீலனை செய்த நீதிமன்றம் பிணை அனுமதியை வழங்கியது.
2022 நவம்பர் மாதம், 29 வயதான பெண் ஒருவரை தனுஸ்க குணதிலக்க சிட்னியில் சந்தித்துள்ளார்.
இதனையடுத்து அவர் குறித்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த முறைப்பாட்டுக்கமைய தனுஷ்க குணதிலக்கவிற்கு எதிராக அவுஸ்ரேலிய அரச சட்டத்தரணி ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதன் அடிப்படையில் தனுஷ்க குணதிலக கடந்த நவம்பர் 6 ஆம் திகதி அதிகாலை சிட்னியில் கைதானார்.
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு பிணை அனுமதி வழங்கப்பட்ட நிலையில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் விதித்துள்ள தடையை நீக்குவது குறித்து பரிசீலித்து வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணைகள் தொடர்ச்சியாக 4 நாட்களாக சிட்னியில் இடம்பெற்றன.
இந்த நிலையில் சாட்சி கோரல்கள் மற்றும் எழுத்துமூல சமர்ப்பணங்கள் கடந்த 4 நாட்களாக நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட நிலையில் தனுஷ்க குணதிலக்க குற்றமற்றவர் என நீதிபதி சாரா ஹகெட் தீர்ப்பு வழங்கினார்