கடைசி 20க்கு20ல் வெற்றி பெற்ற இந்தியா - தொடர் சமன்!

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 3ஆவதும் இறுதியுமான, 20க்கு 20 போட்டியில், இந்திய அணி 106 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

கடைசி 20க்கு20ல் வெற்றி பெற்ற இந்தியா - தொடர் சமன்!

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 3ஆவதும் இறுதியுமான, 20க்கு 20 போட்டியில், இந்திய அணி 106 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 7 விக்கட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்திய அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ், 56 பந்துகளில் 100 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இந்தநிலையில், 202 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய, தென்னாபிரிக்க அணி 13.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 95 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

குல்தீப் யாதவ் 2.5 ஓவரில் 17 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 1-1 என சமன் செய்தது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது.

2-வது போட்டியில் தென்ஆப்பிரிக்கா வெற்றி வெற்றி பெற்றிருந்தது. 

சதம் அடித்த சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார்.