காற்றின் வேகம் அதிகரிக்கும் - வடக்கு கிழக்கு மழைவீழச்சி விபரம்!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றிரவு வேளையில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடுமென அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பகுதிகளில் காற்று அதிகரித்து வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இன்று (15.12.2023) காலை 08.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் வடகிழக்கில் கிடைக்கப்பெற்ற மழை வீழ்ச்சிகளின் அளவுகள் பின்வருமாறு:
அம்பாறை மாவட்டம்:
பொத்துவில் - 35.3mm,
அம்பாறை - 21.5mm,
இக்கினியாகலை - 7.3mm,
எக்கல் ஓய 23.0mm,
பன்னலகம 18.7mm,
மகா ஓய 32.9mm,
பாணமை 15.9mm,
லகுகல 12.5mm,
திகவாவி 25.0mm,
அக்கரைப்பற்று 24.6mm,
இலுக்குச்சேனை 24.1mm,
சாகமம் 61.0mm,
றூபஸ்குளம் 62.2mm,
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை 50.2mm.
மட்டக்களப்பு மாவட்டம்:
மட்டக்களப்பு நகர் 48.6mm,
உன்னிச்சை 52.0mm,
உறுகாமம் 65.2mm,
வாகனேரி 66.7mm,
கட்டுமுறிவுக் குளம் 43.0mm,
பாசிக்குடா 71.0mm.
திருகோணமலை மாவட்டம்:
திருகோணமலை 60.4mm,
கடற்படைத்தளம் 44.6mm,
குச்சவெளி 31.4mm,
பாலம்பட்டாறு 39.0mm,
கந்தளாய் 39.3mm.
வட மாகாணம்:
யாழ்ப்பாணம் 12.1mm,
அச்சுவேலி 15.3mm,
பருத்தித்துறை 8.0mm,
நயினாதீவு 7.1mm,
நீர் வழங்கள் நிலையம் 27.8mm,
நீர்ப்பாசன திணைக்களம் 12.0mm,
நெடுந்தீவு 4.5mm,
கிளிநொச்சி 131.4mm,
ஆணையிறவு 51.2mm,
சாவகச்சேரி 11.4mm,
தெல்லிப்பழை 5.8mm,
அம்பன் 12.0mm,
இரணைமடு 184.5mm,
முல்லைத்தீவு 153.3mm,
அலம்பில் 112.6mm,
ஒட்டுசுட்டான் na,
வள்ளிபுனம் 139.9mm.